Presidential Secretariat of Sri Lanka

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான மிகப்பெரிய தொண்டு நிறுவனமான இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவதுஆண்டுவிழா நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

1917 ஆம் ஆண்டில், சாரணர் இயக்கத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய இளம் பிரித்தானிய ஆசிரியை ஜென்னி கெல்வர்லியினால் முதலாவது மகளிர் சாரணர் குழுவை கண்டி உயர்மகளிர் பாடசாலையில் ஆரம்பித்தார்.

அதன்படி, நேற்று (21) இலங்கை சாரணர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டு 106 வருடங்கள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொடி தினத்தை முன்னிட்டு, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் கலாநிதி சாந்தி வில்சன், தொடர்பாடல் ஆணையாளர் ருக்‌ஷானி அஸீஸ் மற்றும் பல்வேறு திறமைகளை கொண்ட மாணவர் பிரிவின் சாரணத் தலைவியான வசந்தா சரோஜனி ஹேமசிங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு சாரணர் கொடியை வழங்கி வைத்தனர்.

இலங்கை சாரணர் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் சாரணர் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டது.

(English) Recent News

Most popular