Presidential Secretariat of Sri Lanka

OGP எவ்வாறு செயற்படுகின்றது

OGP எவ்வாறு பணியாற்றுகின்றது?

OGP யின் கீழ் பங்கேற்கும் நாடுகள் அனைத்தும் சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி நல்லாட்சி முன்முயற்சிகளை நடைமுறை்கிடும் வகையில்  ஓர் இரண்டு வருட தேசியச் செயல் திட்டத்தை அபிவிருத்திசெய்யுமாறு வேண்டப்படுகின்றன. OGP வழிகாட்டல்கள் பின்வரும் உள்மைய விழுமியங்களின்மீது கட்டியெழுப்பப்படும் ஒரு பன்முக நலனுரித்தாளர் செயல்முறை ஊடாக குடிமக்கள் மற்றும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்தி தேசிய செயல் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகின்றன.

  • ஒரு தீர்மானத்தால் பாதிப்புறுவோர் தீர்மானம் மேற்கொள்ளும் செயல்முறையில் பங்குபற்றவேண்டுமென்னும் நம்பிக்கையின்பேரில் இடம்பெறும் பொதுமக்கள் பங்கேற்பு
  • பொதுமக்கள் பங்கேற்பு தீர்மானத்தின்மீது பொதுமக்களின் பங்களிப்பு செல்வாக்குச் செலுத்தும் என்னும் வாக்குறுதியை உள்ளடக்குகின்றது.
  • தீர்மானம் மேற்கொள்வோர் உள்ளிட்ட வகையில் சகல பங்கேற்போரினதும் தேவைகள் மற்றும் நலன்களை அங்கீகரித்து, ஏனையோருக்கும் எடுத்துரைப்பதன் மூலம் பொதுமக்கள் பங்கேற்பு நிலைபேறான தீர்மானங்களை முன்னேற்றுகின்றது.
  • பொதுமக்கள் பங்கேற்பு ஒரு தீர்மானத்தால் பாதிப்புறக்கூடியவர்கள் அல்லது அதில் அக்கறை உள்ளவர்களின் ஈடுபாட்டை நாடி, அதற்கு வழியேற்படுத்துகின்றது.
  • பொதுமக்கள் பங்கேற்பு அவர்கள் பங்கேற்கும் முறையை வடிவமைப்பதில் பங்கேற்போரிடமிருந்து உள்ளீடுகளை நாடிப்பெற்றுக் கொள்ளுகின்றது.
  • பொதுமக்கள் பங்கேற்பு ஓர் அர்த்தமுள்ள வகையிலான பங்கேற்புக்காக அவர்களுக்கு அவசியப்படும் தகவல்களை வழங்குகின்றது.
  • பொதுமக்கள் பங்கேற்பு தமது உள்ளீடுகள் எவ்வாறு தீர்மானத்தைப் பாதித்தது என்பது குறித்து பங்கேற்போருக்கு அறிவிக்கின்றது.

 

Most popular