Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு உதவியாளர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சந்திப்பு…

அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திற்கு இன்று (07) பிற்பகல் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இவ் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் காலி முகத்திடல் வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் நேற்று (06) முதல் இடம்பெற்று வருகின்றது.

2017ஆம் ஆண்டு முதல் எந்தவொருவரினதும் கவனத்திற்கு உள்ளாகியிருக்காத தமது சேவையை உறுதிப்படுத்தித் தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் மூலம் வழங்கப்பட உள்ள ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளின் கீழ் இந்த 1300 பேருக்கும் தொழில் வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களிடையே சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்த நாட்டின் ஒரே ஆட்சியாளரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

(English) Recent News

Most popular