Presidential Secretariat of Sri Lanka

கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பொறுப்புடன் செயற்பட்ட சுகாதார சேவை பணியாளர்களுக்கு Cinnamon Hotels & Resorts இடமிருந்து இலவச விடுமுறை பொதி

கொவிட் 19 நோய்த் தொற்க்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட சுகாதார சேவை பணியாளர்களை கௌரப்படுத்தும் வகையில் Cinnamon Hotels & Resorts இலவச விடுமுறை பொதியொன்று வழங்கப்பட்டுள்ளது.

‘Cinnamon சுவவிரு பிரனாம’ என பெயரிடப்பட்டுள்ள இப்பொதி குறித்த அறிவிப்பு John Keells Holdings நிறுவனத்தின் தலைவர் நிஷாத் பாலேந்திரவினால் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை பணிக்குழாமினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகாதார அமைச்சின் தெரிவின்படி 1000 பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு Cinnamon Hotels & Resorts கீழ் உள்ள 09 ஹோட்டல்களில் ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் இரண்டு இரவுகள் இலவசமாக தமது விடுமுறையை கழிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பொதி 2020 ஜுலை 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 வரை செல்லுபடியாகும். Cinnamon Grand Colombo, Cinnamon Lakeside Colombo, Cinnamon Red Colombo, Cinnamon Bey Beruwala, Cinnamon Wild Yala, Cinnamon Lodge Habarana, Cinnamon Citadel Kandy, Habarana Village by Cinnamon மற்றும் Trinco Blu by Cinnamon ஆகிய 9 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவுசெய்ய முடியும்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

(English) Recent News

Most popular